கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
Let's pray ever at the feet of
Cassia flower adorned Shiva's son
Nuggets of wisdom
1.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்---Father and mother are the foremost Gods
2.ஆலயம் தொழுவது சாலவும் நன்று---Worshipping in a shrine is good
3.இல்லறம் அல்லது நல்லறம் அன்று---Abjuring domestic life is never a virtue
4.ஈயார் தேட்டை தீயார் கொள்வர்---Niggard's riches would be looted ( by the wicked )
5.உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு---Moderate eating makes a woman pretty
6.ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்---Antagonising countrymen would ruin your roots
7.எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்---Mathematics and literature are like two eyes
8.ஏவா மக்கள் மூவா மருந்து---A nostrum for parents is inferring their wishes
9.ஐயம் புகினும் செய்வன செய்---Do it right even if you beg
10.ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு---Always cling on to a worthy guy
11.ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்---Brahman's duty is to recite vedic scriptures
12.ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு---Jealousy ruins progress
13.அஃகமும் காசும் சிக்கெனத் தேடு---Be prudent in seeking grains and money
14.கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை---Morality is all about no breach of trust
15.காவல் தானே பாவையர்க்கு அழகு---Guarding against breach adds beauty to a woman
16.கிட்டாதாயின் வெட்டென மற---Foreget what you can't get
17.கீழோர் ஆயினும் தாழ உரை---Be humble even to underlings
18.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை---Fault finding will deprive relationships
19.கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்---Arrows never brag about valour
20.கெடுவது செய்யின் விடுவது கருமம்---Give up if your action will harm some one
21.கேட்டில் உறுதி கூட்டும் உடைமை---Tenacity in adversity enhances possession
22.கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி---Education is the true wealth than your craft
23.கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி---Proximity with ruler helps in times of need
24.கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு---Gossip by a tattler is like a fire fanned by wind
25.கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை---Denigrating others cause ill will
26.சந்ததிக்கு அழகு உவந்து இசையாமை---Children thrive.. when parents don't yield
27.சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு---Bringing up noble children is the duty of parents
28.சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு---Cherishing Shiva is mark of austerity
29.சீரைத் தேடின் ஏரைத் தேடு---Till the land to seek wealth
30.சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்---To have kins around is comely
31.சூதும் வாதும் வேதனை செய்யும்---Gambling and arguments bring distress
32.செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்---Ignorance rules when one forgets skills
33.சேமம் புகினும் யாமத்து உறங்கு---A snooze is exigent even for a watchman
34 சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்---If affordable give alms before you dine
35.சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்---Unblemished become affluent
36.சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்---The lazy wail their woes
37.தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை---Nothing is bigger than dad's counsel
38.தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை---There is no greater God than one's mother
39.திரை கடல் ஓடியும் திரவியம் தேடு---Sail across to seek wealth
40.தீராக் கோபம் போராய் முடியும்---Rage could end in riot
41.துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு---Apathetic woman is dangerous
42.தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்---Woman's slur will be deemed a plaint
43.தெய்வம் சீறின் கைதவம் மாளும்---God's ire ruin craft
44.தேடாது அழிக்கின் பாடாய் முடியும்---Extravagance without earning results in penury
45.தையும் மாசியும் வையகத்து உறங்கு---During winter sleep in straw thatched dwelling
46.தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது---Bread earned by toil tastes better than one earned by subjugation
47.தோழனோடும் ஏழைமை பேசேல்---Never discuss your poverty even to a friend
48.நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும்---Discord brings distress
49.நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை---No grumbles when entire nation flourishes
50.நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை---Erudites never fail to honour their words
51.நீரகம் பொருந்திய ஊரகத்து இரு---Live in places with water resources
52.நுண்ணிய கருமமும் எண்ணித்துணி---Asess before embarking on even the easiest task
53.நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு---Learn sacred text percepts and behave virtuously
54.நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை---No treachery can be hidden from your scruples
55.நேரா நோன்பு சீர் ஆகாது---False austerity implies no virtue
56.நைபவர் எனினும் நொய்ய உரையேல்---Never insult the inferior
57.நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்---Even short statured can reach heights by their deeds
58.நோன்பு என்பது கொன்று தின்னாமை---Austerity shuns slaughter
59.பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்---As you sow so shall you reap (Your deeds good or bad will repay you in kind )
60.பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்---Let it be milk,but eat at the right time
61.பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்---No lust for another man's wife is a worthy virtue
62.பீரம் பேணில் பாரம் தாங்கும்---Breastfed children would be fortified
63.புலையும் கொலையும் களவும் தவிர்---Shun meat,lynch and loot
64.பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்---The immoral lack righteous conduct
65.பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்---Spiritual liberation rises above temporal love and hate
66.பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்---The pretence of ignorance is a woman's ornament
67.பையச் சென்றால் வையம் தாங்கும்---A guarded approach behoves well
68.பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்---Eschew all wrongful conduct
69.போனகம் என்பது தான் உழந்து உண்டல்---Earn bread by your own toil
70.மருந்தே ஆயினும் விருந்தோடு உண்---Even if it is a rare elixir share it with every one
71.மாரி அல்லது காரியம் இல்லை---Without rain nothing happens
72.மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை---Thunders precede rains (Hard efforts bear fruits later)
73.மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது---A sailor is needed to steer a barge
74.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்---Every deed has a repercussion
75.மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்---Wise counsels from seniors are like nectar
76.மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு---Soft mattress gives good sleep
77.மேழிச் செல்வம் கோழை படாது---Riches from ploughing never slump
78.மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு---Stay away from harlots
79.மொழிவது மறுக்கின் அழிவது கருமம்---Disregarding wise counsels bring disaster
80.மோனம் என்பது ஞான வரம்பு---Silence is a prelude to spiritual knowledge
81.வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்---Even if you are affluent(farmer) be thrifty
82.வானம் சுருங்கில் தானம் சுருங்கும்---When rains fail charity falls
83.விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்---Not feeding guests does not befit a host
84.வீரன் கேண்மை கூர் அம்பாகும்---A brave friend is akin to posessing a sharp arrow
85.உரவோர் என்கை இரவாது இருத்தல்---The strong never solicit aid
86.ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு---The assiduous enhance wealth
87.வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை---The well-disposed are never destructive
88.வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை---The king's (ruler's) ire makes one helpless
89.வைகல் தோறும் தெய்வம் தொழு---Worship God every morning
90.ஒத்த இடத்து நித்திரை கொள்---Sleep in a suitable place
91.ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்---The illiterates are bereft of good conduct
No comments:
Post a Comment